Saturday, September 3, 2011

Greeting Cards


Dear Friends,
Just posting few Hexagon greeting cards I prepared to gift my friends on their special occasions. The hexagon design is copied from a wedding invite. I do not know if they have come out well but I always feel happy that I had put in “little efforts and time and more of my love” to make them :-)












Where is the party? - குவா குவா கதை - 2


“அம்மா தான் அப்பாவுக்கு செல்லக் குட்டி..” என்றேன்.
“இல்ல… நான் தான் அப்பாவுக்கு செல்லக் குட்டி..” என்றான்.
“யாரு முதல்ல சாப்பிட்டு முடிக்கராங்களோ… அவங்க தான் அப்பாவுக்கு செல்லக் குட்டி..”  என்றார் அவர்.
உடனே அவன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.
“அம்மா… கதை சொல்லட்டா? ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டாங்களாம்…” என்று ஆரம்பித்தேன்.
“மொக்கை போடாதம்மா…” என்றான்.
“ஹா ஹா.. ஏன் இப்டி அவன்ட தினமும் பல்பு வாங்கற?” என்றார் அவர்.
“நா கதை சொல்றேன் ம்மா… ஒரு டினோசர் வந்துதாம்… ” என்று நிறைய கதைகளை சொன்னான்.
பேசிக்கொண்டிருக்கும் போதே “அம்மா…. பிரியாவோட அம்மா hospital - ல போய் இருந்துட்டு வரும்போது அவளுக்கு தம்பி பாப்பா எடுத்துட்டு வந்தாங்க ம்மா… நீயும் போய் hospital - ல இருந்து பாப்பா எடுத்துட்டு வாம்மா… ” என்றான்.
நான் கொஞ்சம் யோசித்து விட்டு….. ” பாரு… உனக்கு சாப்பாடு ஊட்டித் தரணும்… உன்ன குளிச்சு விடணும்…. பாப்பாக்கும் எல்லாம் செய்யனும் இல்ல…” என்று சொல்லி முடிப்பதற்குள்…”பாப்பாவ நான் குளிச்சு விடறேன் மா… நான் எல்லாம் செஞ்சு விடறேன்” என்றான். நான் சிரித்துக் கொண்டேன்.
“அம்மா.. பிஸ்கட் கொடும்மா.. அங்க ஒரு பப்பி க்கு பசிக்குதாம் ம்மா… நா அத அங்கேயே வெயிட் பண்ண சொல்லிட்டு வந்திருக்கேன்.. அதுக்கு பிஸ்கட் கொடுக்கலாம் ம்மா….” என்று வாங்கிக் கொண்டு போனான்.
“அம்மா… நம்ம சாயங்காலம் சூப்பர் மார்க்கெட் ல போய் பாப்பா வாங்கிட்டு வரலாம் ம்மா……” என்றான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் ரொம்ப ஏங்க ஆரம்பித்துவிட்டதாக எனக்கு மனதில் தோன்றியது.
சில நாட்களுக்கு பிறகு:
என் பக்கத்தில் படுத்திருந்தான்.
“அம்மா… வயிறு மேல கால் போடாதடா கண்ணம்மா.. பாப்பாவுக்கு வலிக்கும் இல்ல…” என்றேன்.
“சரிம்மா…” என்று தடவிக் கொடுத்தான்.
“குளிருதாடா குட்டி.. ” என்று போர்வையால் அவனை மூடினேன். “அம்மா… பாப்பாவுக்கும் குளிரும் இல்ல.. உள்ள குஷன் வெச்சிருக்கியாம்மா? ” என்றான்.
“வெச்சிருக்கேன் டா….” என்றேன்.
“அம்மா… அன்னிக்கு தருண் நம்ம வீட்டுக்கு வந்தான் இல்ல.. அப்போ அவன் என் spider man 
பொம்மையை உடச்சுட்டான் ம்மா.. அவன் வரும்போது நம்ம பாப்பாவ தூக்கி மேல வெச்சிருவோம் ம்மா…” என்றான்.
நான் சிரித்தேன்.
“அம்மா… பாப்பாக்கு உள்ள போர் அடிக்கும் இல்ல… அதுக்கு விளையாட பொம்ம வெச்சிருக்கியாம்ம்மா?” என்றான்.
“வெச்சிருக்கேன் கண்ணு..” என்றேன்.
ஸ்கேன் ரிப்போர்ட் - சை பார்த்துக் கொண்டிருந்தோம். அவனும் ஆசையாய் குழந்தையைப் பார்த்தான். தீடிரென்று முகத்தை கைகளால் மூடிக் கொண்டு டேபிள் இல் படுத்தான். சார்  கோபித்துக் கொள்கிறாராம்…
“ஏன் டா கோப படற?” என்றேன்.
“போம்மா….. ஏன் பாப்பாவுக்கு டிரஸ் போடாம போட்டோ எடுத்துருக்க?… உனக்கு அறிவே இல்லமா… ” என்றான்.
“நான் மனசுல நெனக்கறத எல்லாம் நீ அப்டியே சொல்லிட்ற…நீ ஏன் மகன் இல்ல…. நண்பன் டா…” என்றார் அவர்.
“அடீங்க….” என்றேன்.
“சாரி டா.. அடுத்த தடவ போட்டோ எடுக்கும் போது பாப்பாவுக்கு டிரஸ் போட்டு எடுக்கறேன்… சரியா?” என்று சமாதானம் செய்தேன்.
சில நாட்களுக்கு பிறகு:
அவனுக்கு அன்று ரோஸ் கலர் சட்டை போட்டு விட்டேன்.
“ரோஜாப்பூ மாதிரி இருக்க மா… அம்மா வீட்ல இருந்து பாப்பாவ பாத்துக்கறேன்… நீ அப்பா கூட ஆனந்த் மாமா வீட்டு பார்ட்டிக்கு போய்ட்டு வா….” என்று அனுப்பி வைத்தேன்.
ஆனந்த் என்னுடன் வேலை பார்க்கும் கொலீக்.. என்னுடன் கல்லூரியில் படித்த நண்பனும் கூட. அவனுக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்திருந்தது. அதற்கு தான் பார்ட்டி.
திரும்பி வந்தவுடன் “அம்மா…. ஆனந்த் மாமாக்கு ஆபீஸ்- ல Promotion  கொடுத்துருக்காங்க- நு அப்பா சொன்னாங்க… ” என்றான்.
அவரை கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறான் என்று எனக்குப் புரிந்தது.
“உனக்கு ஏன் ம்மா Promotion  தரல?” என்று கேட்டான்.
“அம்மா… பாப்பா பிறக்கும் போது நிறைய நாள் லீவு எடுத்தேன் இல்ல.. அதான் தரல…” என்றேன்.
அவன் முகம் சுருங்கியது. “அம்மா.. நான் தானே பாப்பா வேணும்- நு கேட்டேன்.. சாரி ம்மா…” என்றான்.
எனக்கு சுளீரென்று குத்தியது. நான் அவன் அவ்வளவு யோசிப்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன் Promotion என்றால் என்னவென்று புரிந்து கொள்வான் என்று கூட நான் நினைக்கவில்லை.
உடனே சுதாரித்துக் கொண்டு….
“நம்ம வீட்லயும்  ஒரு ஆளுக்கு Promotion கெடச்சிருக்கே… ” என்றேன்.
அவன் அப்பா முகத்தை பார்த்தான். அவர் என்னைப் பார்த்தார்.
“நீ அண்ணா வா Promotion  ஆயிருக்கியே..அத விட இது தான் பெரிய்ய்ய்யய Promotion … நம்ம வீட்லயும் பெரிய பார்ட்டி கொண்டாடலாம்..” என்றேன்.
அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
“அப்பா… உனக்கு கேக், பலூன்ஸ் எல்லாம் வாங்கி தரேன்” என்றார் அவர்.
“பலூன் வேண்டாம் ப்பா.. அன்னிக்கு பலூன் உடஞ்சப்போ பாப்பா பயந்துருச்சு இல்ல…” என்றான்.
“கலர் பேப்பர்ஸ் வாங்கித் தாங்கப்பா” என்றான்.
எனக்கு அவனை நினைத்து பெருமையாக இருந்தது.
Wogey… Where is the party?..
நம்ம வீட்ல பார்ட்டி..
All are most welcome.
வரும்போது என்ன gift கொண்டு வருவீங்க நு கமெண்ட்ல போடுங்க…
குவா குவா கதை - 1

P.S: These stories are purely fictitious. Usually, when I post such stories in my office internal blog, people drop their comments mentioning words like "your son.. your daughter and all".... Ha Ha Ha.. பயபுள்ளைங்களுக்கு என்ன வெச்சு காமெடி பண்றதே பொழப்பா போச்சு...