Wednesday, December 8, 2010

நன்றி TN Govt......

நான் சென்ற October மாதம் பள்ளிக் குழந்தைகள் வசதியாக பள்ளிக்கு சென்று வர ஏதுவான சில வழி வகைகளை பற்றி "சிந்திப்போம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிவு செய்திருந்தேன்.

அதே பதிவை நான் பணி புரியும் நிறுவனத்தின் உள் வலைப்பூவில் (Office Internal Blog ) பதிவு செய்தபோது என் நண்பர்கள் பல நல்ல யோசனைகளை பின்னூட்டங்களில் பரிந்துரைத்திருந்தார்கள். தொடர்ந்து சில நாட்களில் என் கோரிக்கையும் நிறைவேறியது. அந்த நற்செய்தியை என் மதிப்பிற்குரிய அண்ணன் ஜோன்சன் அவர்கள் தன்னுடைய வலைப்பூவில் பதிவு செய்திருந்தார்.

என் மகிழ்ச்சியையும், அந்த நற்செய்தியை பற்றிய ஜோன்சன் அண்ணாவின் பதிவையும், மற்ற நண்பர்கள் அளித்த ஆலோசனைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த பதிவு.

ஜோன்சன் அண்ணாவின் பதிவு...

--------------------------------------------------------------------------------------------------------

//
PUBLISHED BY JONSON ON 02 NOV 2010

TN CM listens to Ch1Bloggers!!

Add To Favorites , Report Abuse ,

When I opened today’s newspaper, there was a surprise - a long term expectation was fulfilled (partially).

MTC operates special buses for School children during school timings - Trial run in 12 Routes!

https://ch1blogs/blogs/170653/2010/10/12/சிந்திப்போம்

என்ற இடுகையில் என் அன்புத் தங்கச்சி ‘தர்மலட்சுமி’//தினமும் காலை நேரங்களில் (விடுமுறை நாட்கள் தவிர) பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு என்று தனியாக பேரூந்துகளை இயக்கலாம்.// என்ற ஒரு கோரிக்கையை முன்மொழிந்திருந்தாள். (தன் கோரிக்கை நிறைவேறும் வரை புது போஸ்ட் போடப்போவதில்லை என்று உறுதிமொழி ஏதும் எடுத்திருந்தாளா என்று தெரியவில்லை!!, அதான் கோரிக்கை நிறைவேறியாச்சில்ல, புது போஸ்ட் போடலாம்ல! ).

இதுபோன்று ஏற்கெனவே பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த விசயம் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. தாமதமாக வந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல விசயம். ”நான் அவஸ்தைப் பட்டதுபோல், இப்போதுள்ள சிறுவர்கள் நெரிசலில் சிக்கவேண்டாம்” என்று நீங்களெல்லாம் நினைத்து மகிழ்ந்துகொள்ளலாம்.

MTC operates special buses for School Children in the following routes:

1) 23 C

2) 29 A

3) 11 G

4) 12 B

5) 21 L

6) 27 D

7) 29 C

8. 47

9) 5 B

10) 6 D

11)37 B

12)38 C

I appreciate this.

You can also congratulate MTC officials.

//
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் பின்னூட்டங்களில் அளித்த ஆலோசனைகள்


12 Oct 2010 at 1:05 pm1Murugan, Karthika


Thought provoking post Dear.... Romba romba nalla pathivu.... yosikka vendiya vishayam

12 Oct 2010 at 1:05 pm2V N, Jhanani Priya

nalla padhivu dharma...

//தினமும் காலை நேரங்களில் (விடுமுறை நாட்கள் தவிர) பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு என்று தனியாக பேரூந்துகளை இயக்கலாம். //

idhu nichayam yosikka pada vendiya vishayam... thagundha adhigaarigalin kavanathitrku kondu sella naam muyarchikkalaam... idhaip parri sameebathil oru fm ilum pesak ketten.. adhigarigal yosiththal sugam...

sila niruththangalil, palli vidum samayathil, perundhu nirpadhu kooda kidaiyathu...

marra padi thani irukai sari pattu varadhu ena ninakiren, enenil palli sellum pillagalin ennikkai sarre adhigam...

nammal mudinththai nichayam seyvom dharma..

12 Oct 2010 at 1:05 pm3P, Paramanantham

பிரச்சினை சரிதான். தீர்வுதான் தப்புனு தோணுச்சு. பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினாலே எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று தோன்றுகிறது.

நான் குழம்பிய இன்னொரு விஷயம், பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்திருந்தால் நாங்கள் எழுந்து இடம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆண்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் எந்தப்பெண்ணாவது இதுவரை எழுந்து இடம் கொடுத்திருக்கிறீர்களா?


12 Oct 2010 at 1:09 pm4V N, Jhanani Priya

@Param-- sila samyam naan seythathu undu params...sila samayam pengal irukaiyil angal utkarndhu irundhalum, avargalai ezhunthirukka solli ketka matten enaku nirka thembu irukum patchathil ..

12 Oct 2010 at 1:34 pm5Chandrasekharan, Dharmalakshmi

@ Karthi
Thanks for your comments da.

@ Jhanani akka,
I got a wonderful opportunity to spend some 90 mins with Dr.Abdul Kalaam a year back. I spoke to him about this. Everyone over there suggested the same thing as you said.
We will certainly take it forward akka.
Let us all join join hands and make this dream come true.

12 Oct 2010 at 1:39 pm6Chandrasekharan, Dharmalakshmi

@ Parama,

ஆண்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண்ணிடம் நீங்கள் எழுந்து இடம் கொடுக்கச் சொன்னால் கண்டிப்பாக அவள் எழுந்து கொண்டு இடம் கொடுப்பாள்.. ஆனால் பெண்மையை நன்றாக அறிந்த உங்கள் மனது அந்த செயலை செய்ய அனுமதிக்குமா என்பதே கேள்வி..

12 Oct 2010 at 1:43 pm7Nagaraj, Dinesh

Dharma.. Govt to allocate separate buses for school childrens in the morning time is not possible as of now. Rather we have seen stickers in the buses like seat reserved for senior citizens and differently abled people. Like wise can make message to public as to leave seat for school childrens when they are in bus.

Lots of people are pasting some adds and other stickers in buses to pass messages to public. We can use it to pass the message "Leave Space for young INDIANS"........

- Dinesh Kumar

12 Oct 2010 at 1:43 pm8Nagaraj, Dinesh

Dharma.. Govt to allocate separate buses for school childrens in the morning time is not possible as of now. Rather we have seen stickers in the buses like seat researved for senior citizens and differently abled people. Like wise can make message to public as to leave seat for school childrens when they are in bus.

Lots of people are pasting some adds and other stickers in buses to pass messages to public. We can use it to pass the message "Leave Space for young INDIANS"........

- Dinesh Kumar

12 Oct 2010 at 1:45 pm9Chandrasekharan, Dharmalakshmi

@ Dinesh,

Sooper Idea nanba... We can certainly do that ... This will definitely reach ppl nanba ....

12 Oct 2010 at 2:15 pm10V N, Jhanani Priya

@Dinesh-- This is good idea...but my concern is about the children, i afraid if they use this privileage as taking for granted..two possibilities are here,

1. Children might take it in a way tht, they are specially treated.This is goes in over dosage might stop them in putting their efforts till they succeed in what they want.

2. Other possibility is, they might take it a way that they are under privileaged(though this is the worst scenario and chances are seemigly less)

I might be wrong.. but my only concern is every thing should reach children in right way, As what they receive today matters a lot in moulding them..

12 Oct 2010 at 3:11 pm11Nagaraj, Dinesh

Our People will leave space only for school kids who are deserving and difficult to travel and struggling lot with their schools bags n sisters\brothers..

There are lots of kids who whom goes to school together with their sister or brother. Recently some where in a magazine I read that a brother n sister going to school. Sister got into the bus some how and the boy cant able to get into the bus and he got into the Bus tyre and passed on .. Sister came to know only after reaching the school. This happened in chennai near tambaram.

Leave space for futute INDIANS will defintely help to those such peoples.

12 Oct 2010 at 3:23 pm12V N, Jhanani Priya

oh.. thts soo bad...

12 Oct 2010 at 3:26 pm13Chandrasekharan, Dharmalakshmi

@ Dinesh,

That's a very sad news ...

14PR, Arun

இலவசமாக மசாஜிங் அயர்னிங் எல்லாம் செய்து முடிப்பார்கள்/// hehehee apdiyaaa...

Ithukku thaan seat'ah ellam thookita comfort'ah ninnukitu pogalam'la'nu yosanai sonna paithiyakaarannu solliduraainga ...

12 Oct 2010 at 4:03 pm15Gunasekaran, Asha Sekar

வருங்கால இந்தியாவின் தூண்கள் அஸ்திவாரத்திலேயே வலுவிழந்தால் வல்லரசை நோக்கிய நமது கனவு நினைவாகுவது எப்படி?

superb line ..do u think how many of them aware of this situations in our India and we very well know eventhough they experience such things personally ,none will be ready to find a solution for this ..our society is built up like tat ..

This is really a very good effort from your part to create awareness among our people (cognizant) which should be spreaded all over India thro mails and messages so that asap we'll hope that in buses we can see our YOUNG INDIANS seated happily with their books in hand instead of lunch and school bags..

HATS OFF TO DHARMA ..U DESRVE IT ..

12 Oct 2010 at 6:09 pm16Chandrasekharan, Dharmalakshmi

@ Arun ...

Indha madhiri idea koduka dhaan oorukulla oru all in all azhagu raja arun venumgradhu ....

@ Asha

Thanks ma.

16 Oct 2010 at 11:08 pm17Jonson

பரமா,

ஆண்களுக்கு என்று தனியாக இடம் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளவும். அது பொது. அங்கு பெண்களும் அமரலாம். ஆனால், பெண்களுக்கு என்று இருப்பதானது, ஒதுக்கப்பட்ட இருக்கைகள்!

மிக நல்ல இடுகை. இதுபற்றி இன்னும் நிறையபேர் பேசவேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தில் ஏதாவது செய்வார்கள்.

18 Oct 2010 at 10:18 am18Chandrasekharan, Dharmalakshmi

@ Jonson

Thanks for your comments and support ... We are still discussing among ourselves to take it forward ... Will certainly keep posted on the updates ...

03 Nov 2010 at 2:11 pm19Dhandapani, Santhanakrishnan

அருமையான பதிவு. அப்படியே பள்ளிகளையும் அதிகப்படுத்தலாம்; இருக்கும் பள்ளிகளை தரமுயர்த்தலாம். பள்ளி அருகில் இல்லாமலும், தரமான பள்ளிகளை தேடி பயணிப்பதையும் குறைக்கலாம்.

02 Dec 2010 at 6:26 pm20Chandrasekharan, Dharmalakshmi

@ Santhanakrishnan,

Thanks for your comments. You have put forward a very valid point. I too have the same thought.

Cheers,
Dharmalakshmi @ Ranjani
http://embracetheneedykids.blogspot.com/
Look back and thank God. Look forward and trust God. Look around and serve God. Look within and find God.

Tuesday, November 9, 2010

A Self Evaluation Test

உங்களுடைய இசை ஆர்வத்தையும் கவிதை ரசனையையும் சுய மதிப்பீட்டுக் கொள்ள ஒரு வாய்ப்பு.

இந்தப் பதிவில் பிரபலமான பத்து சினிமா பாடல்கள் Lyrics மாத்தி தரப்பட்டு உள்ளன. நீங்கள் அந்த பாடல்களை ஊகித்து அதன் original ராகத்தில் இந்த duplicate வரிகளைப் பாடிப் பார்க்கவும்.. சரியாகப் பொருந்தினால் உங்கள் ஊகமும் சரி தான்…

Disclaimer: Some of the questions in the below questionnaire are my own and some are taken from some sources which I do not remember as I heard most of them in childhood.

If your score is

Equal to 10 - Very Good
Less than 10 & greater than or equal to 8 - Good
Less than 8 & greater than or equal to 5 - Better
Less than 5 & greater than or equal to 3 - Poor
Less than 3 - Very poor

போட்டிக்கான விதிமுறைகள்
  • யாரும் பின்னூட்டங்களில் மற்றவர் அளித்த விடையை copy அடித்து Evaluate செய்து கொள்ள கூடாது.  
  • முதலில் படிப்பவர்கள் கேள்விகளுக்கான விடைகளை பின்னூட்டங்களில் அளிக்கலாம்.
  • அடுத்துப் படிப்பவர்கள் முதலில் படித்தவர்கள் விட்டுப்போன / தவறாக பதில் அளித்த கேள்விகளுக்கு விடையை பின்னூட்டங்களில் அளிக்கலாம்.  
  • தங்கள் grades- அய் அனைவரும் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
களத்தில் இறங்கலாமா?

  
இதோ கேள்விகள் …

(1)

வெறி நாய்ப் போலே கடிப்பவள் இவளா?
எரும மாட்டுத் தோல் போல் மெல்லிய மகளா?
கழுதையில் செதுக்கிய குரலா?
சூர்ப்பனகை அரக்கியின் மகளா?
சாராய பீப்பா இவள் தானா?

(2)

எனைக் காணவில்லையே ஏர்போர்ட் - இல்
எங்கும் தேடித் பார்க்கிறேன் நடு ரோட்டில்
உயிர் ஓடிப் போனதோ சுடுகாட்டில்
அன்பே………
நான் செருப்பில்லாதவன் தெரியாதா?
ஒரு செருப்பு வாங்கித் தர முடியாதா?
அன்பே………

(3)

கிழவியைக் கொண்டு வா..
கட்டிலில் கட்டி வை..
மூக்கில் பஞ்சு வை..
நெத்தியில் காசு வை..

இன்று முதல் இரவு..
இந்தக் கெழவிக்கு எழவு..

எரிக்கவா? புதைக்கவா?
நீ வா..

(4)

நீ ஒரு ஜந்து
சாக்கடப் பொந்து
நாத்தம் பொறுக்க வில்ல
குறத்தி இருந்தும்
குறவன் இருந்தும்
அள்ள முடியவில்ல
அத சொல்லத் தெரியவில்ல…

(5)

அழுகிய அண்ணி
ஆத்துல தண்ணி
அடிக்கடி குளிச்சாளே
ஜலதோஷம் பிடிச்சு
Bed - உல படுத்து
புட்டுன்னு போனாளே..

(6)

பன்னு மேலே cheese துளி
உற்றுப் பார்க்கும் ஒரு விழி
பன்னு தனி.. ஜாம் தனி..
புடுங்கித் திங்க தடை இனி…

(7)

Your smile என்ன விலை?
Colgate paste விலை..
உன் cheeks என்ன விலை?
Bata செருப்பு விலை ..

(8)

சிவப்பு நிறமே சிவப்பு நிறமே
அவ செருப்பின் நிறமும் அந்த நிறமே ..

(9)

நட்ச்சத்திர ஹோட்டல் - இல்
நாய் எட்டிப் பாக்குது
எலும்புத் துண்டுக்காக
சிக்கன் பீசுக்காக..

(10)

குப்பத் தொட்டி தேடி வந்த
பன்னிக் குட்டி நீ
குப்பத் தொட்டி தேடி வந்த
பன்னிக் குட்டி நீ…

ஒரு எச்சிலை வழுக்கி
தொட்டில விழுந்தது
மாமே …

Now tell me ….. What’s your score?

இதைப் படித்துவிட்டு .. தூ .. தூ… இதெல்லாம் ஒரு post - ஆ என்று துப்ப நினைப்பவர்கள் பொது இடங்களில் துப்பாமல் சற்று ஓரமாக துப்பவும் …

This post is just for fun …


மெய்யாலுமே இசை ஆர்வமும் கவி ரசனையும் உடையவர்கள் தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் …

Cheers,
Dharma

Tuesday, October 12, 2010

சிந்திப்போம்

சென்னை வந்ததிலிருந்தே எப்போதும் கூட்ட நெரிசலில் சிக்கி சின்னா பின்னமாகித் தான் பயணிக்க வேண்டி வருகிறது. அனைத்துப் பேரூந்துகளிலும் மக்கள் இரு படிகளிலும் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதே வாடிக்கை ஆகிவிட்டது. முக்கால்வாசிப் பேரூந்துகள் நிறுத்தங்களில் சரியாக நிற்பது இல்லை. பெரும்பாலும் ஓடும் பேரூந்துகளிலேயே நாம் ஏற வேண்டி வருகிறது.

எங்கள் ஊரில் எல்லாம் பேரூந்துகள் ஆற அமர நிறுத்தங்களில் நின்று செல்லும். சில சமயங்களில் சிறிது நேரம் உட்கார்ந்து கூடச் செல்லும்.

எப்படியோ அடித்துப் பிடித்து உள்ளே ஏறிய பின்னர் அருகில் இருப்பவர்கள் இலவசமாக மசாஜிங் அயர்னிங் எல்லாம் செய்து முடிப்பார்கள். பயணச்சீட்டு வாங்குவதற்கு நடத்துனருக்கு பணத்தை பாஸ் செய்ய வேண்டும். அதை வழியிலேயே ஆட்டயப்போடும் ஆசாமிகளும் உண்டு.

சில நேரங்களில் நிறுத்தங்களுக்கு முந்தைய சிக்னலில் வண்டி நிற்கும்போதே நாம் இறங்கிக் கொள்ள வேண்டும். நிறுத்தம் வந்தவுடன் நிப்பாட்டச் சொன்னால் “அதான் அவ்ளோ நேரம் சிக்னல் - அ நின்னுச்சுல.. எறங்கிருக்க வேண்டி தானே..” என்று நடத்துனர் வாழ்த்துமடல் வாசிப்பார் … சில சமயங்களில் “சிக்னல்-ல ஏம்மா எறங்கற… ஸ்டாப் வர்ற வரைக்கும் பொறுக்க முடியாதா” என்றும் கூறுவார்.. அவருடைய மன நிலையைப் பொறுத்து…

இவ்வாறாக பேரூந்து நெரிசலில் சிக்கி அலுவலகம் வந்து செல்லும் பொழுது பல சுவாரஸ்யமான சம்பவங்களை காண நேரிடுகிறது. அவற்றுள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------------

களம்: M7 பஸ் - கிண்டி to வேளச்சேரி பயணத்தின் போது.

ஒரு இருக்கையில் ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியும் அவள் அருகில் அவளுடைய இரண்டாம் வகுப்பு படிக்கும் சகோதரனும் அமர்ந்து கொண்டு பயணம் செய்தார்கள். அருகில் ஒரு ஆன்டி நின்று கொண்டிருந்தார். பஸ்-இல் வசதியாக நிற்கும் அளவுக்கு நெரிசல் சற்று குறைவாகத் தான் இருந்தது. ஆன்டி - உம் சற்றே திடமாகத் தான் இருந்தார்.

ஆன்டி (சிறுமியிடம்): “பாப்பா… ஆன்டி- க்கு வயசாச்சுல்ல.. கொஞ்சம் தள்ளி உக்காரும்மா …நானும் உங்க கூட உக்கார்ந்துக்கறேன்…”

சிறுமி: “நாங்க கூடத்தான் தினம் காலையில பெரிய Bag - ஆ தூக்கிட்டு கூட்டத்துல இடி பட்டு மிதி பட்டு நிக்க முடியாம வரோம். அப்போ .. யாரவது.. நாங்க சின்ன பசங்களே .. பாவமே-ன்னு நெனச்சு .. இடம் குடுக்கறீங்களா? இடம் எல்லாம் தர முடியாது போங்க ..”

மொத்த பேரூந்தும் குலுங்கி குலுங்கி சிரித்தது …
-------------------------------------------------------------------------------------------------------------------
என்றாலும் அந்த குழந்தையின் பேச்சு சிந்திக்க கூடிய கருத்தாகும் …

தினமும் காலையில் பள்ளி மாணவர்கள் ஒரு பெரிய பொதி மூடியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நெரிசலில் சிக்கி சிதைந்தும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் பயணம் செய்கிறார்கள்…

காலை உணவில் சேகரித்த மொத்த சக்தியும் இந்த பயணத்திலேயே விரயமாகி விட்டால் எப்படி முழு கவனத்துடன் பாடங்களை கவனித்து உள்வாங்கி படிப்பார்கள்?

வருங்கால இந்தியாவின் தூண்கள் அஸ்திவாரத்திலேயே வலுவிழந்தால் வல்லரசை நோக்கிய நமது கனவு நினைவாகுவது எப்படி?

ஏற்கனவே அரசாங்கம் பள்ளி குழந்தைகள் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கி உள்ளது. ஆனால் சில நடத்துனர்கள் (நான் எல்லோரையும் கூறவில்லை) இலவசமாக பயணம் செய்யும் குழந்தைகளை இழிவாக நடத்துகிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு முறை எங்கள் ஊரில், பள்ளி செல்லும் எட்டு வயது சிறுமி ஒருத்தி அவள் தம்பியுடன் ஒரு தனியார் வண்டியில் ஏறிவிட்டாள். அங்கு அவளுடைய பஸ் பாஸ் செல்லாது என்பதை புரிந்து கொள்ளும் வயது அவளுக்கில்லை. அந்த ஏழைக் குழந்தையிடம் பணமும் இல்லை. அந்த நடத்துனர் குழந்தை என்று கூட பாராமல் குரூரமாகத் திட்டினான். ரோஜாவைப் போன்ற முகம் சருகாய் வாடியது. அவளுடைய தம்பிக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. பயணிகள் பலர் அவளுக்கு பயணச்சீட்டு வாங்கித் தர முன் வந்தார்கள். அதற்குள் அவள் இறங்கிவிட்டாள் எல்லோர் மனதையும் பிசைந்தபடி..
-----------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு என்ன செய்யலாம்..??
  • தினமும் காலை நேரங்களில் (விடுமுறை நாட்கள் தவிர) பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு என்று தனியாக பேரூந்துகளை இயக்கலாம்.
  • பேரூந்துகளில் மகளீருக்கு என்று தனியாக இருக்கைகள் ஒதுக்கப் பட்டிருப்பதைப் போல பள்ளி செல்லும் குழைந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக இருக்கைகளை ஒதுக்கலாம்.
  • நாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் எழுந்து கொண்டு நம் இருக்கையை கொடுப்பதைப் போல பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் நாம் எழுந்து கொண்டு நம் இருக்கையைக் கொடுக்கலாம்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களை கொஞ்சம் கனிவாக நடத்தலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------
நம் பாரத மாதாவின் சின்னச் செல்லக் குட்டீஸ் சுட்டீஸ் எல்லோரையும் நம் வீட்டுக் குழந்தைகளாய் நேசிப்போம்.

நண்பர்களே உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளயும் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

சற்றே பெரிய பதிவாயினும் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு முழுமையாய் படித்தமைக்கு நன்றி.

சிந்தனையுடன்,
தர்மா

Tuesday, September 28, 2010

நவீனா.. இவள் இளவரசியின் மகள்

மௌனம், சிரிப்பு மற்றும் அழுகையை மட்டுமே மொழியாய் அறிந்தவளின் உலகத்தில் புதியதாய் ஒரு வார்த்தை பிரவேசித்து விட்டது. "அக்க்க்..கா .... " என்று மிக அழுத்தமாக அழைத்துக்கொண்டு Hostel Dining Hall- க்குள் எட்டிப் பார்த்தாள் நவீனா.

உடனே அவளை இளவரசி அக்கா அங்கிருந்து அடித்து இழுத்துச் சென்றாள். குழந்தை "வீல்.." என்று அழுதுகொண்டு அவளிடமே சென்றது. நாங்கள் பரிதாபமாய் பார்த்தோம்.

"பாப்பா உள்ள சூ.. சூ.. போச்சுன்னா ஓனர் திட்டுவார்மா... எவ்ளோ அடிச்சாலும் அழுதுகிட்டு அது எங்கிட்டயே தான் திரும்ப வருது.. அதுக்கு என்னத் தவிர வேற யாரையும் தெரியாது மா ..." என்று சொல்லி விசும்பினாள் இளவரசி அக்கா.

இளவரசி அக்கா காதலனால்/கணவனால் கைவிடப்பட்டு பெற்றோர்களாலும் கைகழுவப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் இல்லத்தில் குழந்தையுடன் வசித்து வந்தாள். எங்கள் Hostel- இல் துப்பரவு தொழில் செய்ய நியமிக்கப்பட்டாள்.

நவீனாவுக்கு பிடித்தமான மற்றொரு விஷயம் அவளை ஒத்த குழந்தைகள். எங்கள் Hostel ஓனரின் பேரக் குழந்தைகளுக்கும் அவளை மிகவும் பிடிக்கும். ஆனால் ஏனோ ஓனர் அக்குழந்தைகளை அவளுடன் சேர விடுவதில்லை. அதன் பின்னால் இருக்கும் நியாயமான காரணத்தை என்னால் இதுவரை ஊகிக்க முடியவில்லை.

நவீனா அவள் தாயையே எப்போதும் சுற்றி வருவதால் இளவரசி அக்காவால் சரிவர வீட்டு வேலைகளை செய்ய முடியவில்லை. அவள் பெற்றோர்களும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக காதலித்ததை காரணம் காட்டி அவளை நிராகரித்தனர். நவீனாவின் தந்தை தன் பெற்றோர்களின் பேச்சை மீறாமல் வேறு திருமணம் செய்து கொண்டு சுகமாக வாழ்கிறான். வேறு வழியில்லாமல் இளவரசி அக்கா மறுபடியும் அந்த இல்லத்திலேயே தஞ்சம் புகுந்தார்.

"காதல் தோல்வியில் எங்காவது பெண்கள் தாடி வளர்த்தோ தண்ணி அடித்தோ பார்த்திருக்கிறீர்களா" என்று பல ஆண்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

பெண்ணுக்கு கருவறை இல்லாமல் இருந்திருந்தால், அதில் காதலன் கொடுத்துச் சென்ற குழந்தை இல்லாமல் இருந்திருந்தால், அதை உழைத்துக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் .. பெண்களும் கூட தாடி வளர்த்து, தண்ணி அடித்து.. காதல் பட முருகனைப் போல 'ஞ .. ஞ.." என்று தலையில் அடித்துக் கொண்டு திரிந்திருப்பார்கள்...

என்ன சொல்கிறீர்கள்???????

Thursday, September 23, 2010

முதல் காதல்.. முதல் வெட்கம்..

நான் “ஆ..” என்று ஊட்டிய சோற்றை
“அம்..” என்று சொல்லி வாங்கிக்கொண்டு
“அக்கா.. நான் பெரிய்ய்ய்….யவன் ஆனப்புறம்
உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவா?”
என்று cute-ஆக propose செய்த
நான்கு வயது பாலகனிடம் உணர்ந்தது
முதல் காதல் :-)

—————————————————————–

“அக்கா.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க …”
என்று கண் பார்வையற்ற
தோழி ஒருத்தி
கூறியபோது உணர்ந்தது
முதல் நாணம் !

Wednesday, September 1, 2010

தேடல்


உனக்குப் பின்னால்ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி விளையாடும்
என் இதயத்தைத் தேடுகிறேன்..

பெற்றோர்களின் திருமண ஆல்பத்தில்
தன புகைப்படத்தைத் தேடும்
குழந்தையைப் போல..

Wednesday, August 18, 2010

I love you Puppy :)

When I greatly cherish my pleasant and lovely college days, I also remember with mild sadness, the incident that perturbed me but still made me more humane. That was a lovely morning and our ladies hostel was busy in its activities. I started for college. As I came out of the hostel, my eyes were searching… searching… for my lovely little friend who was so fond of licking people’s legs…. No wonder! ….. He was a puppy… I fondly called him ‘Subramani Kutty’ as he looked like the one starred in ‘Mundram Pirai’ film. First let me say how our relationship bloomed. When he was newly born, he was drawing the attention of everyone in our hostel. He was looking so cute and was very playful. Even though I liked him a lot, I loved to see him from a safer distance. When he came near me or bite my slippers or licked my legs, I would start screaming as I was scared of dogs. This is because I was chased by a puppy when I was a kid….. 


Now Flashback ….. I was six years old and my brother was one year old. I took my brother for a walk in the afternoon of a hot sunny day. My little brother who had just learnt to walk came with me so happily. Everyone was in their house having a nap after lunch. The street was deserted. As we started walking, a puppy who was so bored of loneliness, wanted to play with us. He started licking our legs and biting our slippers as all puppies do. We both got scared and started crying. The puppy was running between our legs. My brother could not balance his steps as he had just started walking and I was also too small to carry him in my arms. When we were struggling with that puppy, an Uncle passed by that way. He took both of us in his arms, consoled us and left us in our home. From then on, I would never go near a puppy. I would just stay away and watch while others were playing with it. 

Now back to my college days and Subramani kutty… One day afternoon when he came near me, I behaved in the same way as I used to do with the other puppies. One of my friends told me that he wanted to become my friend…. He wanted to play with me … He was just expressing his affection by way of licking and biting…. Still I was not convinced.
That night when I was on my bed, I was thinking of the puppy. Deep in my heart I liked him a lot …….. But still scared …. At last I made up my mind ….. Gathered some courage ….. I dreamt of carrying him …….playing with him and making him lot more happier. I was eagerly looking forward to play with that puppy… I got up early in the morning and got ready for college the next day …. 

And that was the day I was searching for him outside the hostel. After trying my best, I asked the watchman about him. He told that the day before, the puppy was sleeping under the shade of a bus tyre. As he was very small, he could hardly be noticed. The driver started the bus without noticing him. The tyre ran over his body and he was no more. I wept bitterly that day.

But his loss changed me a lot. Nowadays whenever I look at a puppy, I used to remember him. I’ll put away all my fears and play with it remembering my dream of playing with my ‘Subramani Kutty’. 
I love you my dear Puppy ! You made me more humane!

அமில மழை


சூழ்நிலை கைதிகள்


கனா கண்டேனடி


உனக்கு நீயே சிற்பி