வணக்கம் மக்களே!
என் அலுவலக உள்வலைப்பூவில் கருப்பட்டி காபி கிளப்- னு ஒரு சங்கம். அதுல முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பதிவுப் போட்டியில் நான் பங்கேற்று அனுப்பிய பதிவு இங்கேயும்.
நம்ம கருப்பட்டி காபி கிளப் நடத்தற “யாரு பெரிய பல்பு - ஆ வாங்கினா? “ என்கிற போட்டில நானும் Participate பண்ணலாம் - நு யோசிக்கும் போது ஒரு flashback ஞாபகத்துக்கு வந்தது.
நான் முதன்முதலா ஒரு ஹைக்கூ எழுதி அத எங்க கல்லூரி magazine - கு அனுப்பி வெச்சேன்.
இது தான் அந்த ஹைக்கூ…
“அனைவருக்கும் வழிகாடிவிட்டு
அவன் மட்டும்
நடுத்தெருவில் நிற்கின்றான்…
- Traffic Policeman! “
பயபுள்ளைங்க அத ஜோக்ஸ் ல Publish பண்ணி எனக்கு பல்பு கொடுத்தாங்க..
அதுலேர்ந்து எனக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு. நம்ம எதையாது எழுதி… அத KKC போட்டிக்கு tag பண்ணி… இதெல்லாம் செல்லாதுனு பல்பு கொடுத்துட்டா…!!!!!!!!!!!!!!!!! ஹ்ம்ம்… எப்படி பாத்தாலும் அதுவும் பல்பு தானே…அத ஒரு போஸ்டா போட்டு tag பண்ணீறலாம்…..
எப்பூடி! ….
ஒரு உப்புக்கு சப்பாநியாவாது நம்மளும் ஆட்டைல கலந்துக்கறதுனு முடிவு பண்ணி ஒரு போஸ்டையும் எழுத ஆரம்பிச்சேன்.
அப்போ தான்…
“Scooby Scooby doo. Where are you? We have some work to do now…”
என்று அலைபேசி ஒலித்தது…(அதாங்க.. என்னோட ringtone ) .. எடுத்து பாத்தா…
“Tension Calling….”
Shubbhaa…..
மறுபடியும் “Scooby Scooby doo. Where are you? We have some work to do now…” எடுத்து பாத்தா…
“Don’t attend Calling….”
Grrrrrrrrr….
மறுபடியும் ” Excuse me boss.. U have got a message”
எடுத்து பாத்தா… “Message from WrongNumber2″
கடுப்பேத்தறாங்க My Lord!
Contacts அதிகம் ஆயிடுச்சு இல்ல… அதான் Easy யா Identify பண்ண எல்லாரோட தொலை பேசி எண்களையும் ஒரு பின் குறிப்போடயோ முன் குறிப்போடையோ சேமிச்சு வெக்கறது வழக்கமாயிடுச்சு….
சரி நம்ம போஸ்டுக்கு வருவோம்…
நான் அப்போ தான் கம்பெனி ல சேர்ந்து Training எல்லாம் முடிச்சிட்டு ஒரு project - உம் கிடைக்காம… Bench -அ தேய்ச்சிட்டு இருந்தேன். அப்போ தான் இந்த பாழாப்போன Recession வந்து எல்லா project - ல உம் ஆட்குறைப்பு நடந்துட்டு இருந்தது. அதனால் நான் எந்த project - கு போனாலும்
“அடச்சீப… நாங்களே அண்ணன் எப்போ கெளம்புவான்? திண்ணை எப்போ காலி யாகும் - னு நின்னுகிட்டு இருக்கோம்.. இதுல நீ வேற… ELTs - கு எல்லாம் project தர்றது இல்ல… போய் வீட்ல பெரியாளு யாராது இருந்தா கூட்டு வா - னு எங்கள விரட்டி விரட்டி அடிச்சாங்க.. “
யாரக் கேட்டாலும் கொஞ்சம் பொறுமையா இரு - னு அறிவுரை சொன்னாங்க…
சரி.. “பொறுமை எருமையினும் பெரிது” - னு சுவாமி தர்மானந்தா சொல்லிருக்காங்க… நானும் அதை மனுசுல வெச்சிக்கிட்டு
“ஓடு மீன் ஓட.. உறுமீன் வருமளவு வாடியிருக்குமாம் கொக்கு..” -னு காத்துகிட்டு இருந்தேன்…
சில பேர் பேப்பர் -அ போட்டுட்டு வேற வேலை ட்ரை பண்ண சொன்னங்க.. ஒரு project Experience - உம் இல்லாம Recession நேரத்துல paper -அ போட்டுட்டு போனா.. வீடு வீடா போய் ‘Hindu’ , ‘Indian Express’ - னு பேப்பர் போடற வேலையை தான் பாக்கணும்…
சோதனை மேல் சோதனை.. சொறிய சொறிய வேதனை - னு நொந்து போய் உக்கார்ந்து இருந்தப்ப தான்… அப்போ தான் .. அப்போ தான்…
அவன் என் வாழ்க்கையில நுழைஞ்சான்…
அவனும் என்னை போலவே எல்லா project - லும் நிராகரிக்கப்பட்டு… Why blood Same blood - னு .. எனக்கு அறிமுகம் ஆனான்…
உங்க நம்பர் என்னங்க .. என்று என் நம்பரை வாங்கிக் கொண்டான்… அதை “Dharma cts” என்று சேமித்து கொண்டான். நானும் அவன் நம்பரை வாங்கி… நம்ம தான் பெரிய அப்பாடக்கர் ஆச்சே.. ரொம்ப தெளிவா சேமித்து வைக்கறதா scene -அ போட்டு “கௌரி Bench” னு save பண்ணி வெச்சிருந்தேன்…
அப்படியே நாங்க எங்கள மாதிரியே வெட்டியா சுத்திட்டு இருந்த நிறைய பேர ஒன்னு தெரட்டி ஒரு Gang Form பண்ணிட்டோம்..
எல்லாரும் காலையில வந்து…. இருக்கற ஒன்னு ரெண்டு சிஸ்டம்-கு சண்ட போட்டு மெயில் செக் பண்றது.. அப்பறம் ஒரு பிரேக்… அப்பறம் ஒரு Pre-lunch.. then lunch .. then post-lunch … then evening tea break … இப்படி வரிசையா எல்லா pantry - லயும் போய் தின்னு.. சிக்குன்னு சிறுத்த குட்டி மாதிரி .. இருந்த கௌரி பெருத்த பெருத்த குட்டி ஆகீட்டான்…
இப்படி எல்லாம் சாப்ட்டு நீ என்ன ஆன-னு யாரும் என்ன கேக்க கூடாது.
சில பேருக்கு ‘Obesity’ மாதிரி.. எனக்கு “ஒல்லிசிட்டி”..
என்ன செஞ்சாலும் அந்த 32 கிலோ-வ தாண்ட மாட்டேன்குது.. சில பேர் என்னவோ வெயிட் போடறது cooker - ல வெயிட் போடற மாதிரி சுலபமான விஷயம்னு சொல்றாங்க… ஹ்ம்ம்… சரி அதை விடுங்க.. நம்ம matter - கு வருவோம்..
ஒரு வழியா கஷ்டப்பட்டு ஒரு project - ல நுழைஞ்சிட்டோம்… Fortunately/Unfortunately ரெண்டு பெரும் ஒரே project ல…
அப்போ ஒரு நாளைக்கு… அவன் என் Mobile -அ பாத்துட்டு கேட்டான்…
அதான் project-ல settle ஆகி… critical resource(!!!!) - உம் ஆகியாச்சு இல்ல.. இன்னும் ஏன் என் பேர Bench - னு save பண்ணிருக்க.. என்று feel பண்ணி சொன்னான் .. சரி- னு நானும் அதை அழிச்சுட்டு… நம்ம தான் அடைமொழி இல்லாம save பண்ண மாட்டோமே… “குண்டு கௌரி” னு save பண்ணி வெச்சிருந்தேன்..
எங்க கூட ஒரு வட இந்திய தோழி ஒருத்தி இருந்தா. அவ அவன் நம்பரை எங்கிட்ட கேட்டா.. நான் அதை பிசினஸ் கார்டு அனுப்பி வெச்சேன்.. அவ.. “குண்டு கௌரி” கு அர்த்தம் கேட்டு அவளும் அவன் பேரை அப்டியே save பண்ணி வெச்சுண்டா..
ஒரு நாளைக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து பிரேக் போனோம்.. ஹ்ம்ம்…இப்போ எல்லாம் ஒரு பிரேக் தான்.... திரும்ப வரும்போது அவ மொபைல்-அ pantry லையே மறந்து வெச்சிட்டு வந்துட்டா…
அதை ஒரு நல்ல மனம் படைத்தவர்… அவர்ஒரு வட இந்தியர்… பாத்துட்டு…Last Dialed Number - கு call பண்ணி கொடுத்தறலாம்னு ஐடியா வோட பாத்தா…. அவ கடைசியாய் பேசி இருந்தது .. அட.. நம்ம குண்டு கௌரி…
அவர் போன் பண்ணி..
“Am I speaking to Mr.குண்டு கௌரி?”
என்று மிக கனிவாக கேட்டிருக்கிறார். இவன் டென்ஷன் ஆகி
” Am not குண்டு கௌரி. Am கௌரி.”
என்று பதிலளித்து விட்டு mobile -அ வாங்கி கொடுத்துட்டு நேர என் place - கு வந்தான்….
அப்பறம் என்ன?
“ஸ்டார்ட் மியூசிக்…….&*(%^%^&*@#*_$#…..” ….தான் …..
செம பல்பு வாங்கினேன்…
இதோட முடியல… இனிமே தான் highlighttu …
எனக்கு தெரிந்த ஒரு நபர்…… அவரை பத்தி பேசினாலே டென்ஷன் தலைக்கு ஏறுது… அவர பத்தி நா பொலம்பி பொலம்பி என் நண்பர்கள் எல்லாரும் அவன் போட்டோ -வ கேட்டாங்க..
எங்கிட்ட போட்டோ - லாம் இல்ல… Google - ல கொரில்லா னு search பண்ணுங்க.. வரும் னு சொல்லிடுவேன்…
அதுவும் Friday casuals - ல எரும மாடுக்கு T-Shirt போட்ட மாதிரி இருப்பாரு…
சில நாட்கள்ல எனக்கு பல தடவ கால் பண்ணி… தொல்ல பண்ணுவாரு… அவர் தொல்ல தாங்காம நா அவர் நம்பர்-அ மூதேவி னு save பண்ணி வெச்சிருந்தேன்..அவர் Landline நம்பர் -அ மூதேவி1 - னு … இப்படியே போச்சு..”
இந்த ஐடியா உபயம் கௌரி.. அவன் தான் அவனுக்கு பிடிக்காதவங்க நம்பர அப்படி save பண்ணி வெச்சிருப்பான்.. கடைசில.. வளத்த கடா மார்புல பாயும் னு சொல்ற மாதிரி அவன் பிட்-அ அவனுக்கே போட்டேன்..
நம்ம என்ன பேசிகிட்டு இருந்தோம்? . ஹான்… மூதேவி… சில சமயம் காலையிலேயே கால் பண்ணிருவான்… காலங்காத்தால போன்-அ எடுத்து பாத்தா மூதேவி காலிங் னு வரும்.. அந்த நாளே உருப்படாம போகும்.. ஆனாலும் நான் அவன் பேர மாத்தல… ஆனா மேல சொன்ன incident நடந்த பிறகு…
யம்மாடி.. நான் என்னைக்காவது மொபைல்-அ மறந்து வெச்சு.. யாரவது கால் பண்ணி…
“Am I speaking to Mr.மூதேவி நா? “
அவ்ளோ தான்….
அடுத்து நம்ம KKC ல இருந்து “யாரு பெரிய ஆப்பு வாங்கினா?” - நு எதாவது போட்டி வச்சாங்கனா அதுல participate பண்ண போஸ்ட் ரெடி ஆயிருக்கும்.
அதுக்கப்பறம் தான் இந்த மாதிரி வில்லங்கமா save பண்ண பேர எல்லாம் கொஞ்சம் decent-ஆஹ மாத்தினேன்…
ஆனா.. குண்டு கௌரி… எப்பவும் குண்டு கௌரி தான்.. ஏனா நீ என் நண்பேன் டா.. …
ஒரு சின்ன வேண்டுகோள்.. தயவு செஞ்சு யாரும் உங்க மொபைல் -அ என் பேர எப்படி save பண்ணி வெச்சிருகீங்க னு கமெண்ட் ல போட்ராதீங்க..
யாரவது எதாவது டகால்டி வேலை பண்ணீங்க நா உங்க நம்பர் -அ எப்படி save பண்ணி வெச்சிருக்கேன் னு ஒரு பெரிய மொக்கயா அடுத்த போஸ்ட் ல போட்டுருவேன்….
நான் வாங்குன பல்பு-அ நீங்களும் வாங்க வேண்டி வரும்….
நீங்க கல்ல எடுத்து எரியருதுக்கு உள்ள
எஸ்கேப்….
Dharma